அண்டமாய் அவனி யாகி அறியொணாப் பொருள தாகித் தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈச னான திண்டிறல் சரவ ணத்தான் தினமும்என் சிரசைக் காக்க
जो ब्रह्मांड और पृथ्वी बने, जो मन की पहुँच से परे सत्य बने, जो अपने सेवकों के गुरु बने, जो निर्दोष देव बने; जिनकी आठों दिशाएँ स्तुति करती हैं, वे मेरे कृपालु ईश — अडिग पराक्रम वाले, शरवण सरोवर के मुरुगन जी — प्रतिदिन मेरे सिर की रक्षा करें।
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை யீசன் துரிசிலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க
आदि-स्वरूप कैलास के निधि मेरे सुंदर ललाट की रक्षा करें; पराग झरती कदंब-माला धारण करने वाले मेरी दोनों भौंहों की रक्षा करें; ज्योति-स्वरूप तणिगै के ईश मेरे निर्मल नेत्रों की रक्षा करें; स्वामी कार्तिकेय प्रेम से मेरी नासिका की रक्षा करें।
இருசெவி களையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க
सेव्वेल, लाल प्रभु, मेरे दोनों कानों को स्वस्थ रखें; मुरुगवेल मेरे मुख की रक्षा करें; भले कुमार मेरी जीभ और सारे दाँतों की रक्षा करें; गजमुख प्रभु के भाई मेरे निर्दोष गालों की रक्षा करें; शिव जी के सुब्रह्मण्य मेरी गर्दन के पिछले भाग की भली-भाँति रक्षा करें।
ஈசனாம் வாகு லேயன் எனதுகந் தரத்தைக் காக்க தேசுறு தோள்வி லாவும் திருமகள் மருகன் காக்க ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க என்றன் ஏசிலா முழங்கை தன்னை எழில்குறிஞ் சிக்கோன் காக்க
ईश-स्वरूप बाहुलेय मेरी गर्दन की रक्षा करें; लक्ष्मी माँ के भांजे मेरे दमकते कंधों और पसलियों की रक्षा करें; बारह आयुधों वाले प्रभु मेरे निर्दोष वक्ष की रक्षा करें; पहाड़ी प्रदेश के सुंदर राजा मेरी निर्दोष कोहनियों की रक्षा करें।
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தைமா முருகன் காக்க புறங்கையை அயிலோன்காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்குமால் மருகன் காக்க பின்முது கைச்சேய் காக்க
उमा के नन्हे पुत्र मेरी अग्रबाहुओं की रक्षा करें और उन्हें दृढ़ रखें; महान मुरुगन मेरी हथेलियों की रक्षा करें, कि उनमें साहस बढ़े; वेलधारी मेरे हाथों के पिछले भाग की रक्षा करें; तेजस्वी विष्णु के भांजे मेरी दसों उँगलियों की रक्षा करें; और बाल-प्रभु मेरी पीठ की रक्षा करें।
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத் தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க
मयूर-वाहन प्रभु भोजन से भरे मेरे उदर की रक्षा करें; सुगंधित ऊँचे कंधों वाले देवों के स्वामी मेरी नाभि की रक्षा करें; अग्नि और गौरी के पुत्र मेरे गुप्तांग की रक्षा करें; कंद बीज की रक्षा करें; छह मुखों वाले प्रभु गुदा की रक्षा करें।
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க அஞ்சகனம் ஓரி ரண்டும் அரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க செஞ்சரண் நேச ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க
वेल के स्वामी मेरे कूल्हों की पूरी रक्षा करें, रक्षा करें; हर के पुत्र मेरे दोनों नितंबों की रक्षा करें, रक्षा करें; सर्वोपरि सत्य-स्वरूप गांगेय मेरी जाँघों के पिछले भाग की रक्षा करें; लाल चरणों वाले प्रेममय गुरु मेरी जाँघों के पुष्ट अगले भाग की रक्षा करें।
ஏரகத் தேவன் என்தாள் இருமுழங் காலும் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலை வாய்த்தே காக்க நேருடைப் பரடுஇ ரண்டும் நிகழ்பரங் கிரியன் காக்க சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க
एरगम के देव मेरे पैरों और दोनों घुटनों की रक्षा करें; शीरलैवाय (तिरुच्चेंदूर) के देव मेरी सुडौल पिंडलियों की रक्षा करें; परंगिरि के प्रभु मेरे दोनों सीधे टखनों की रक्षा करें; सोलै पर्वत के प्रभु मेरी सुघड़ एड़ियों की रक्षा करें।
ஐயுறு மலையன் பாதத் தமர்பத்து விரலும் காக்க பையுறு பழநி நாத பரன்அகம் காலைக் காக்க மெய்யுடன் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க தெய்வ நாயக விசாகன் தினமும்என் நெஞ்சைக் காக்க
अद्भुत पर्वत के प्रभु मेरे पैरों की दसों उँगलियों की रक्षा करें; हरी-भरी पलनी के स्वामी परम प्रभु मेरे तलवों की रक्षा करें; आदि और निर्मल षण्मुख मेरे पूरे शरीर की रक्षा करें; देवों के नायक विशाख प्रतिदिन मेरे हृदय की रक्षा करें।
ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம் பலிகொள் இராக்க தப்பேய் பலகணத்து எவையா னாலும் கிலிகொள எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம் வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க
ऊँचे शोर के साथ आने वाले भूत-प्रेत, बलि लेने वाले राक्षस-प्रेत, अनेक गणों के कोई भी प्रेत हों — वेल मेरी रक्षा करे कि वे डर जाएँ; और तीक्ष्ण वेल मेरी रक्षा करे कि दुष्ट पराए लोगों का काला जादू और उनके प्रबल मंत्र-तंत्र मुझे कष्ट न दें।
ஓங்கிய சீற்ற மேகொண்டு உவணிவில் வேல்சூ லங்கள் தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின் தீங்குசெய் யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க
यदि शत्रु भारी क्रोध में मुझ पर अपने आयुध उठाएँ — गोफन और धनुष, भाला और त्रिशूल, गदा और तलवार, लाठी, फरसा, बरछी और दूसरे सब — तो उनके पावन हाथ का वेल मेरी रक्षा करे, रक्षा करे, कि वे मुझे कोई हानि न पहुँचाएँ।
ஔவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர் தெவ்வர்கள் எவரா னாலும் திடமுடன் எனைமல் கட்டத் தவ்வியே வருவா ராயின் சராசரம் எலாம் புரக்கும் கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க
ईर्ष्यालु, मांस खाने वाले, मूर्ख, प्रेत, राक्षस, नीच, शत्रु — कोई भी हों, यदि वे मुझसे भिड़ने की ठानकर मुझ पर झपटें, तो चर-अचर सबकी रक्षा करने वाले, सूर के प्रचंड शत्रु के हाथ का वेल मेरी रक्षा करे, रक्षा करे।
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடிநாய் புலிமா யானை கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு நடையுடை எதனா லேனும் நான்இடர்ப் பட்டி டாமல் சடுதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க
घातक विष वाला साँप, सिंह, भालू, कुत्ता, बाघ, हाथी, क्रूर भेड़िया, बंदर, धारीदार बिल्ली, सियार — कोई भी चलने वाला जीव मुझे हानि न पहुँचाए, इसलिए तीक्ष्ण वेल तुरंत मेरी रक्षा करे; गंगा के पुत्र का वेल मेरी रक्षा करे।
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க வன்புள் சிகரிதேள் நண்டுக் காலி செய்யன்ஏறு ஆலப் பல்லி நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி உகமிசை இவையால் எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க
जैसे 'ङ' अक्षर अपने साथी अक्षर से सदा जुड़ा रहता है, वैसे ही ज्ञान-वेल मुझे अपने से लगाए रखकर मेरी रक्षा करे। क्रूर पक्षी, चूहा, बिच्छू, नंडुक्कालि, सेय्यन, विषैली छिपकली, नाखूनों वाला गिरगिट, कनखजूरा, डंक मारने वाला भौंरा और बाघ-कीट — इस संसार में इनमें से कोई मुझे ज़रा भी हानि न पहुँचाए, प्रभु का वेल ऐसी रक्षा करे।
சலத்தில்உய் வன்மீன் ஏறு தண்டுடைத் திருக்கை மற்றும் நிலத்திலும் சலத்தி லும்தான் நெடுந்துயர் தரற்கே யுள்ள குலத்தினால் நான்வ ருத்தம் கொண்டிடாது அவ்வவ் வேளை பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க
जल में पलने वाली बड़ी मछलियाँ, कँटीली पूँछ वाली 'तिरुक्कै' मछली, और धरती तथा जल के वे सब जीव जो केवल लंबा कष्ट देने के लिए हैं — उनसे मुझे पीड़ा न हो, इसलिए प्रभु हर ऐसे समय बल सहित मेरे साथ रहकर रक्षा करें; अग्नि-पुत्र पावकि का तीक्ष्ण वेल मेरी रक्षा करे।
ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிர கக்கோள் காக்க சுமவிழி நோய்கள் தந்த சூலை ஆக்கிராண ரோகம் திமிர்கழல் வாதம் சோகை சிரமடி கர்ண ரோகம் எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க
मयूर-वाहन प्रभु के हाथ का वेल नवग्रहों के प्रभाव से मेरी रक्षा करे; और बारह भुजाओं वाले प्रभु का विजयी वेल ऐसी रक्षा करे कि आँखों के रोग, दाँतों का दर्द, नाक के रोग, सुन्नपन, पैरों का वात, रक्ताल्पता, और सिर तथा कान के रोग हमारे पास न आएँ।
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை குமுறுவிப் புருதி குன்மம் குடல்வலி ஈழை காசம் நிமிரொணாது இருத்தும் வெட்டை நீர்ப்பிர மேகம் எல்லாம் எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க
डमरू की थाप-सा कुचलने वाला सिरदर्द, गले की गाँठें, टीस भरे फोड़े, गुल्म, आँतों का दर्द, दमा, क्षय, उठने न देने वाला गुप्त रोग, और मधुमेह — पर्वत को भेदने वाले प्रभु के हाथ का वेल ऐसी रक्षा करे कि इनमें से कोई हम तक न पहुँचे।
இணக்கம் இல்லாத பித்த எரிவுமா சுரங்கள் கைகால் முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த பிணிக்குலம் எனைஆ ளாமல் பெருஞ்சத்தி வடிவேல் காக்க
शांत न होने वाली पित्त की जलन, तीव्र ज्वर, हाथ-पाँव को सिकोड़कर गलाने वाला कुष्ठ, बवासीर, मंदाग्नि, क्षण में प्राण लेने वाला सन्निपात — जाल कही जाने वाली रोगों की यह पूरी जाति मुझ पर हावी न हो, महान शक्ति का तीक्ष्ण वेल ऐसी रक्षा करे।
தவனமா ரோகம் வாதம் சயித்தியம் அரோச கம்மெய் சுவறவே செய்யும் மூலச்சூடு இளைப்பு உடற்று விக்கல் அவதிசெய் பேதி சீழ்நோய் அண்டவா தங்கள் சூலை எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க
तीव्र प्यास का रोग, वात, सर्दी का रोग, अरुचि, शरीर को सुखा देने वाली भीतरी गर्मी, साँस फूलना, देह को झकझोरने वाली हिचकी, कष्ट देने वाले दस्त, मवाद के रोग, अंडकोष की सूजन, शूल — मेरे प्रभु का दृढ़ वेल ऐसी रक्षा करे कि इनमें से कोई मुझ तक न पहुँचे।
நமைப்புறு கிரந்தி வீக்கம் நணுகிடு பாண்டு சோபம் அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல் இமைக்குமுன் உறுவ லிப்போடு எழுபுடைப் பகந்த ராதி இமைப்பொழு தேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க
खुजली वाले घाव, सूजन, धीरे-धीरे आने वाला पीलिया, शोथ, जम जाने वाले काले-सफ़ेद अनेक प्रकार के कुष्ठ, उल्टी, पलक झपकने से पहले आ जाने वाले दौरे, भगंदर आदि — कृपालु वेल ऐसी रक्षा करे कि ये पल भर को भी मुझ तक न पहुँचें।
பல்லது கடித்து மீசை படப டென்றே துடிக்கக் கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை ஒல்லையில் தார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க
दाँत पीसते, मूँछें फड़काते, पत्थर से भी कठोर हृदय दिखाते, आँखें घुमाकर घूरते, घनी रात से भी काले शरीर वाले यम के दूत भी आएँ, तो तारकासुर के शत्रु का वेल, ॐ ऐं रीं के साथ, क्षण भर में मेरी रक्षा करे।
மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறெந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க
धरती पर, पेड़ पर, पर्वत पर, आग के पास, शीतल गहरे जल पर, चलते वाहन में, आकाश में, गुफा के भीतर, या किसी भी और स्थान में — कृपालु षष्ठी-नाथ का वेल पास आकर मेरी रक्षा करे, रक्षा करे।
யகரமே போல்சூ லேந்தும் நறும்புயன் வேல்முன் காக்க அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க சிகரமின் தேவ மோலி திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க
'य' अक्षर के आकार का त्रिशूल धारण करने वाले, सुगंधित कंधों वाले प्रभु का वेल आगे से मेरी रक्षा करे; 'अ' से आरंभ होने वाले बारह स्वरों जैसे बारह नेत्रों वाले प्रभु का वेल पीछे से रक्षा करे; 'स' से आरंभ होने वाले छह अक्षरों (शरवणभव) के स्वरूप प्रभु के हाथ का वेल बीच में रक्षा करे; बिजली-से दमकते दिव्य मुकुट वाले प्रभु का वेल नीचे और ऊपर से रक्षा करे।
ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல்கி ழக்கில் திறமுடன் காக்க அங்கி விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில் எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க
मधुर-भाषिणी देवयानै के नायक, वल्ली के पति प्रभु का लाल विजयी वेल पूर्व में कुशलता से रक्षा करे; अग्नि की दिशा में ज्ञानी वीर का वेल रक्षा करे; दक्षिण में, कतिरगामम् के प्रभु के हाथ का वह वेल रक्षा करे जो कभी नहीं चूकता और हर शत्रु को जीतता है।
லகரமே போல்கா ளிங்கன் நல்லுடல் நெளிய நின்று தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல் நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க மேற்கில் இகல்அயில் காக்க வாயு வினில்குகன் கதிர்வேல் காக்க
शंखधारी हरि — जिन्होंने कालिय नाग पर खड़े होकर उसका शरीर 'ल' अक्षर-सा ऐंठ दिया और उसे कुचल दिया — उनके भांजे के हाथ का वेल नैर्ऋत्य दिशा में दृढ़ता से मेरी रक्षा करे; पश्चिम में युद्धकुशल वेल रक्षा करे; वायव्य दिशा में गुह का दीप्त वेल रक्षा करे।
வடதிசை தன்னில் ஈசன் மகன்அருள் திருவேல் காக்க விடையுடை யீசன் திக்கில் வேதபோதகன்வேல் காக்க நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில் கீழ்க் கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க
उत्तर में ईश्वर के पुत्र का कृपामय पावन वेल रक्षा करे; वृषभ-वाहन ईशान की दिशा में वेद का उपदेश देने वाले प्रभु का वेल रक्षा करे; चलते, बैठते, बोलते, उठते, लेटते और सोते समय पर्वत को भेदने वाला वेल मेरी रक्षा करे।
இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல் வழங்கும் நல்லூண் உண்போதும் மால்விளை யாட்டின் போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும் செழுங்குணத் தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க
कभी न खोने वाला जीवन देने वाले मुत्तैयन के हाथ का वेल भली-भाँति मेरी रक्षा करे — जब मैं मिला हुआ अच्छा भोजन खाऊँ, जब मैं खेल में लगा होऊँ, और जब मैं प्राचीन देवों द्वारा स्तुत चरणों में झुककर मन को शांत करूँ; और उनका मोर भी दृढ़ता से मेरी रक्षा करे।
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதி கத்தில் வளர்அறு முகச்சி வன்தான் வந்தெனைக் காக்க காக்க ஒளியெழு காலை முன்எல் ஓம்சிவ சாமி காக்க தெளிநடு பிற்ப கல்கால் சிவகுரு நாதன் காக்க
बचपन में, जवानी में, और बढ़ते बुढ़ापे में, छह मुखों वाले शिव-स्वरूप प्रभु स्वयं आकर मेरी रक्षा करें, रक्षा करें; प्रकाश फूटने की भोर में और दिन के पहले भाग में ॐ शिव-स्वामी रक्षा करें; निर्मल दोपहर और तीसरे पहर में शिवगुरुनाथ रक्षा करें।
இறகுடைக் கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பின் இராவில் காக்க நறவுசேர் தாள்சி லம்பன் நடுநிசி தன்னில் காக்க மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க
रात के पहले पहर में पंखों वाले मुर्गे और मोर के स्वामी रक्षा करें; रात के पिछले पहर में सूर के पराक्रमी शत्रु देव रक्षा करें; आधी रात में मधु-सुगंधित चरणों में नूपुर धारण करने वाले रक्षा करें; वेद जिनके आगे झुकते हैं, वे हमारे युवा राजा बिना चूके रक्षा करें, रक्षा करें।
இனமெனத் தொண்ட ரோடும் இணக்கிடும் செட்டி காக்க தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக் கனிவொடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்க வந்தே
अपने सेवकों के साथ मुझे एक परिवार की तरह जोड़ने वाले 'चेट्टि' प्रभु रक्षा करें; अकेले में और भीड़ में शरवणभव रक्षा करें; गहन अनुभूति का उपदेश देने वाले नाथों के राजा रक्षा करें; जिस दास ने इसे प्रेम से गाया, उसके देव स्वयं आकर रक्षा करें।
